சாக்கடை கழிவுகளை அகற்ற ரோபோ! கேரள மாணவரின் கண்டுபிடிப்பு

பாதாள சாக்கடை கழிவுகளை அகற்றுவதற்கு புதிய மேம்படுத்தப்பட்ட ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.  பாதாள சாக்கடைகளை சுத்தப்படுத்தும் பணியில்  மனிதர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்க  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டால் சுத்தப்படுத்த புதிய வகை ரோபோ ஒன்றை கேரளாவை சேர்ந்த  பொறியியல் மாணவர்கள் தயார் செய்து இருக்கிறார்கள். அதனை 13 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தி புதிய ரோபோ தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.  இதன் மூலமாக  தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பாதாள சாக்கடையை சுத்தபடுத்தும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனை தேசிய துப்புரவு பாதுகாப்பு  ஆணைய உறுப்பினர்  ஜகவேஸ் பார்வை இட்டார்.


Leave a Reply