உலக மக்கள் தொகை விழிப்புணர்வு தினம்: தமிழகம், புதுச்சேரியில் மாணவர்கள் பேரணி

Publish by: --- Photo :


உலக மக்கள் தொகை விழிப்புணர்வு தினத்தை ஒட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். சேலத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 300 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கு கொண்டனர்.மாவட்ட ஆட்சியர் ராமன் தொடங்கி வைத்த இந்த பேரணியில் பெண் குழந்தைகளை படிக்க வைத்தல், 21 வயதிற்கு பிறகே பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்தல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

 

கரூரில் குடும்ப நலத்துறை சார்பில் நடத்தப்பட்ட பேரணியில் 100 க்கும் மேற்பட்ட செவிலிய மாணவிகள் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி அரசு கலைக்கல்லூரி வரை நடைபெற்றது. நாகை மாவட்டம் மயிலாடு துறையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் மக்கள் தொகை தினம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பேரணியில் நாம் இருவர் நமக்கு இருவர், பெண் சிசுவை காப்பாற்றுவோம் என்பது போன்ற விழிப்புணர்வு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

 

புதுச்சேரியில் பிரம்மாண்டமாக நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் மாணவ, மாணவிகள் மயிலாட்டம், ஒயிலாட்டம், குச்சிபுடி, பரதநாட்டியம் போன்ற பாரம்பரிய நடனம் ஆடியும், முகத்தில் வண்ணம் பூசியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


Leave a Reply