30 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய கடனை திருப்பி கொடுக்க இந்தியா வந்த கென்ய எம்.பி

30 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய கடனை திருப்பி கொடுப்பதற்காக கென்ய நாட்டு எம்.பி. ஒருவர் இந்தியா வந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கென்யாவின் யாரிபாரி ஆட்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ரிச்சர்ட் கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரை மகாராஷ்டிர மாநிலம் ஔரங்கபாத்தில் உள்ள கல்லூரியில் மேலாண்மை படிப்பு படித்து இருக்கிறார். அப்போது அவருடன் படித்த ஔரங்காபாத்தை சேர்ந்த காசிநாத் என்பவரின் மளிகை கடையில் கடனுக்கு பொருள் வாங்கி இருக்கிறார். படிப்பை முடித்து கென்யா சென்ற அவர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

 

இருப்பினும் கடந்து வந்த பாதையை மறக்காது அண்மையில் இந்தியா வந்த ரிச்சர்ட் தனது மனைவியுடன் காசிநாத் வீட்டிற்கு சென்று அதிர்ச்சி கொடுத்தார். அவரை கண்ட காசிநாத் கண்ணீர் ததும்ப அவரை வரவேற்றார். அப்போது திடீரென 200 ரூபாயை காசிநாத் இடம் ரிச்சர்ட் கொடுத்தார்.அவர் எதற்கு பணம் கொடுக்கிறார் என்று தெரியாமல் காசிநாத் திகைத்து போய் நின்றார். ஔரங்காபாத்தில் உடன் படித்த போது 200 ரூயாய் கடன் வாங்கியதை எடுத்துக்கூறி தனது நண்பரிடம் வழங்கி இருக்கிறார். காசிநாத் குடும்பத்துடன் கென்யா வர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்து இருக்கிறார்.


One thought on “30 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய கடனை திருப்பி கொடுக்க இந்தியா வந்த கென்ய எம்.பி

Leave a Reply