நடிகர் சங்க தேர்தலில் வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட மறுப்பு

Publish by: --- Photo :


தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு உத்தரவிட சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைத்து சங்கங்களின் பதிவாளர் பிறப்பித்த உத்தரவை அடுத்து விஷால் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.அந்த வழக்கில் பதிவாளரின் உத்தரவை ரத்து செய்து தேர்தல் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. அதையடுத்து கடந்த மே மாதம் 23 ஆம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தல் வாக்கு பதிவின் போது பல தபால் ஓட்டுகள் சென்றடையவில்லை என்ற புகார்களும் எழுந்தன.

 

இந்த நிலையில் பதிவான வாக்குகளை உயர்நீதிமன்றம் எண்ணக்கூடாது, வாக்கு பெட்டிகளை பாதுகாத்து வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. தற்போது இந்த வாக்கு பெட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள சௌத் இந்தியன் வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. நடிகர் சங்க உறுப்பினர்கள் சுமார் 10 பேர் தங்களுடைய தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என்று துணை நடிகர்கள் 10 பேர் இடையீட்டு மனு சேர்க்க கோரிக்கை வைத்தார்கள். விஷால் தரப்பில் வாக்கு எண்ணிக்கைகளை நடத்துமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. நீதிபதி அதை ஏற்க மறுத்துவிட்டார்.


Leave a Reply