ஜூன் முதல் நவம்பர் வரை பனிக்காலமா? 5 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தவறான தகவல்

தமிழக அரசின் 5 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் முன்பனிக்காலம் குறித்த பிழையான தகவல்கள் இடம் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. ஐந்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் பருவகாலங்கள் தொடர்பான பாடத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலமே முன்பனிக்காலம் என்றும், அக்டோபர் முதல் நவம்பர் வரை பின்பனிக்காலம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலமே தமிழ்நாட்டின் பனிக்காலம் ஆகும். ஆங்கில் மொழி புத்தகத்தில் இது சரியாக கொடுக்கப்பட்டு உள்ளது என்றும், தமிழ் புத்தகத்தில் இந்த பிழை ஏற்பட்டுள்ளதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர்.


Leave a Reply