பொள்ளாச்சியில் மீண்டும் அரங்கேறிய வன்கொடுமை கொடூரம்

பொள்ளாச்சியில் 16 வயது சிறுமியை காரில் கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொள்ளாச்சியில் மீண்டும் அரங்கேறிய பாலியல் வன்கொடுமை சம்பவம் அந்த பகுதியினரிடயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை பள்ளி மாணவி ஒருவரை காணவில்லை என்று அவரது தந்தை பொள்ளாச்சி காவல் நிலையத்தில் புகார் தந்து உள்ளார். சந்தேகத்தின் அடிப்படையில் குமரன் நகர் பகுதியை சேர்ந்த அமானுல்லா என்ற இளைஞரை காவல் துறையினர் விசாரித்தார்கள்.

 

அதில் திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியை தனியாக அழைத்து சென்ற அமானுல்லா தன்னுடைய 9 நண்பர்களுடன் இணைந்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது தெரிய வந்தது.அந்த சிறுமியை மிரட்டி அமானுல்லாவும் , அவருடைய நண்பர்களும் பல மாதங்களாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

 

நேற்று முன் தினம் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை அமானுல்லாவின் நண்பர்கள் மிரட்டி காரில் அழைத்து சென்றது தெரிய வந்தது.அதையடுத்து காவல் துறையினர் அவர்களை பிடிக்க திட்டம் இட்டனர். அதற்குள் தகவல் அறிந்து சிறுமியை சாலையில் விட்டு இளைஞர்கள் தப்பினார்கள். சிறுமியை மீட்ட காவல் துறையினர், அவர் தொடுத்த புகாரின் பேரில் அமானுல்லா, பகவதி, முகமது அலி, டேவிட் செந்தில், முகமது ராபிக், அருண் நேரு, சையத் முகமது, இஷாத் முகமது, இஷாத் பாஷா ஆகியோரை போலீசார் கைது செய்தார்கள்.

 

தலைமறைவாக உள்ள திண்டுக்கலை சேர்ந்த பிரபு என்பவரை கைது செய்ய இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. கைதுசெய்யபட்டவர்கள் இது போன்று வேறு எதேனும் செயல்களில் ஈடுபட்டு உள்ளனரா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply