சென்னையில் கண் அறுவை சிகிச்சை நிபுணர்களின் வருடாந்திர மாநாடு

சென்னையில் கண் அறுவை சிகிச்சை நிபுணர்களின் முதல் வருடாந்திர மாநாட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் சுகாதாராத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாராத்துறை செயலாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர். 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் உலகு எங்கிலும் இருந்து பிரபல நிபுணர்கள் மற்றும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

 

கண் அறுவை சிகிச்சையில் சமீபத்திய தொழில் நுட்பம் மற்றும் உத்திகளை கண் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் கற்று கொள்வதற்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த கண் மருத்துவத்தில் சாதனை புரிந்த மருத்துவ நிபுணர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கினார். அகர்வால் கண் மருத்துவமனை குழுமத்தலைவர் அகர்வால் இந்தியாவில் 12 மில்லியன் பார்வை அற்றோர் உள்ளனர் என்றும், அவர்களில் 55 சதவீதம் பேர் கண் புரை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இது குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை என்றும், கூறினார்.


Leave a Reply