வேலூர் ஆய்வாளர் ரமேஷ் ராஜுக்கு சொந்தமாக 50 வீடுகள்! சோதனையில் அம்பலம்

வேலூர் மாவட்டம் வணிகவியல் குற்றப்புலனாய்வுத்துறை ஆய்வாளர் ரமேஷ் ராஜுக்கு சொந்தமான 50 வீடுகள் இருப்பது லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. 2010 லிருந்து 2013ஆம் ஆண்டு வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் உளவுத்துறை ஆய்வாளராக ரமேஷ் ராஜ் பணிபுரிந்த போது வருமானத்திற்கு அதிகமாக ரமேஷ் சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு துறை கடந்த 28 ஆம் தேதி ரமேஷ் ராஜ் மீது வழக்கு பதிவு செய்தனர்.

 

இதனையடுத்து வேலூர் மாவட்டத்தில் உள்ள ரமேஷ் ராஜூவின் வீடு மற்றும் தெல்லூரில் உள்ள அவரது தந்தை வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ரமேஷ் ராஜ் தன்னுடைய பெயரிலும், தன்னுடைய உறவினர்கள் பெயரிலும் 50 வீடுகள் வாங்கி இருப்பது சோதனையில் தெரிய வந்து இருக்கிறது. இரண்டு இடங்களிலிருந்தும் 10 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யபட்டு இருப்பதாக தகவல் வெளியாகின்றன. இது தொடர்பாக ரமேஷ் ராஜூவிடம் லஞ்ச ஒழிப்புத்துறை டி‌ஜி‌பி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


Leave a Reply