கணவரின் சகோதரனுடன் மனைவி செக்ஸ் உறவு:கண்டித்த கணவனை கொன்று புதைத்த மனைவி!

கடலூரில் சிங்காரத்தோப்பை சேர்ந்த முருகதாஸ் என்பவருக்கும், சுமிதா என்ற பெண்ணுக்கும் கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அதன் பின்னர் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற முருகதாஸ் 2013 ஆம் ஆண்டு சொந்த ஊருக்கு வந்த போது மாயமானர். சில நாட்கள் கழித்து முருகதாசின் மனைவி , சகோதரர் சுமேர் ஆகியோர் தலைமறைவானதால் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த முருகதாசின் தாயார் மாவட்ட எஸ்‌பி அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து முதுநகர் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சமீபத்தில் சமீதாவும், சுமேரும் ஊருக்கு வந்து முருகதாசின் இரண்டாவது மகனை கேராளவிற்கு அழைத்து சென்றது தெரிய வந்தது. கேராளவிற்கு சென்று அவர்கள் இருவரையும் பிடித்து வந்து விசாரணை நடத்தியதில் முருகதாஸ் தவறான உறவை முறித்துக்கொள்ள சொன்னதால் அவரை கழுத்தை நெரித்துகொன்று உடலை வீட்டின் பின்புற தோட்டத்தில் இருவரும் புதைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு பள்ளம்தோண்டி முருகதாசின் எலும்புகளை எடுத்து ஆய்வுக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.


Leave a Reply