கால்நடை மருத்துவ அறிவியல் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

Publish by: --- Photo :


தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியலுக்கான இளநிலை படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் ராதாகிரிஷ்ணன் சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி வளாகத்தில் வெளியிட்டார். கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டமளிப்புக்கு மொத்தம் 15,476 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளதாக 14,526 விண்ணப்பங்கள் தகுதி பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் உணவு தொழில் நுட்பம் மற்றும், பால்வள தொழில் நுட்ப படிப்புக்கு மொத்தம் 2,772 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும்,2,427 விண்ணப்பங்கள் தகுதி பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

2019- 2020 ஆம் கல்வியாண்டில் பி‌வி‌எஸ்‌சி படிப்புக்கான தரவரிசை பட்டியலில் முதல் 3 இடங்களை மாணவிகளே பிடித்து உள்ளனர். மூவரும் 200 க்கு 199 கட்ஆஃப் மதிப்பெண்கள் பெற்று உள்ளனர். இந்த படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 3 ஆம் வாரம் நடத்தப்படும் எனவும் அமைச்சர் உடுமலை ராதாகிரிஷ்ணன் கூறினார்.