இராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கும் “மது- பார்கள்” கல்லா கட்டும் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை ! மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் !!

இராமநாதபுரம் மாவட்டம் நகர் பகுதியில் பகல் இரவு பாராமல் எந்நேரமும் மது விற்பனை களைகட்டுகிறது, நகரில் “ரெஸ்டாரென்ட்’ என்ற பெயரிலும் சிறிய பெட்டிக்கடை என்ற பெயரிலும் முறைகேடாக மதுபான கூடங்களும், போலி மது விற்பனை அதிகளவு இயங்கி வருகின்றன.இந்த இராமநாதபுரம் மாவட்டம் தொழில் வளர்ச்சியில் சற்று மந்த நிலையில் இருந்தாலும், வேதனையளிக்கும் வகையில் மதுபானம் அருந்துபவர்கள் அதிகரித்து வரும் மாவட்டமாக, மற்ற மாவட்டத்தை ஒப்பிடும்போது, இராமநாதபுரம் மாவட்ட “டாஸ்மாக்’ மதுக்கடைகளும், மது விற்பனையும் அதிகளவு காணப்படுகிறது.

 

காலை முதல் மாலை வரை மதுக்கடைகளின், “பார்கள் நிரம்பி வழிகின்றன. தற்போது, முறைகேடாக பார்கள், முளைத்து வருகின்றன. இந்த “ரெஸ்டாரென்ட்’களில் மது விற்பனை, இயங்கி வருகின்றன. புறநகர் பகுதிகளில், மாநில, தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரங்கள், போக்குவரத்து மிகுந்த முக்கிய ரோடுகள் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சட்டத்துக்கு புறம்பான மையங்கள் செயல்பட்டு வருகின்றன.அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே விற்பனை, பார்களை தவிர மற்ற பகுதிகளில் மது அருந்த தடை என விதிமுறை உள்ள நிலையிலும் விதிமுறை மீறி மது விற்பனை, பார், நடந்து வருகின்றன.

“டாஸ்மாக்’ பார்களில் கூட்ட நெரிசல், உரிய வசதி இல்லாத நிலையில், தனித்தனி அறைகள், குடிசைகள், டேபிள்கள் என களைகட்டும் இந்த “ரெஸ்டாரென்ட்’களில், காற்றோட்டமாக அமர்ந்து குடிக்கவும், உணவு பொருட்களுக்காகவும், பயம் இல்லாமல் குடிக்க இதுபோன்ற “ரெஸ்டாரென்ட்’களை “குடி’மகன்கள் தேர்வு செய்கின்றனர். இவ்வாறு விதிமுறை மீறி இயங்கும் “ரெஸ்டாரென்ட்’களில், முறைகேடாக மது விற்பனை, மது அருந்த அனுமதிக்கப்படுகிறது. உணவு பொருட்கள் விற்பனையும் நடக்கிறது. சில இடங்களில் குடியிருப்புகள், அரசு அலுவலகங் கள், கோவில்கள் மருத்துவமனைகள், பள்ளிகளுக்கு அருகிலேயே இவை இயங்குகின்றன.

 

உள்ளூர் போலீசார், அப்பகுதி கவுன்சிலர், ஆளும்கட்சி பிரமுகர்களுக்கு குறிப்பிட்ட தொகை மாதம்தோறும் கப்பம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதையே மிகப்பெரிய அனுமதியாக கருதி, முறைகேடாக தற்போது மேலும் பல இடங்களில் புதிது, புதிதாக முளைத்து வருகின்றன. முறைகேடாக இயங்கும் மையங்களில் போலி மதுபானங்களும் விற்கப்படுகின்றன. சில இடங்களில் திடீர் “ரெய்டு’ நடத்தி பிடித்தாலும், ஆளும்கட்சியினர் கப்பம் கட்டிய ஆசியுடனும், உள்ளூர் போலீசார் ஆசியுடனும் மீண்டும் வழக்கம்போல் இயங்கி வருகின்றன.

எனவே, சட்டத்துக்கு புறம்பாக இயங்கும் பார்கள்’ குறித்து எஸ்.பி., தனி கவனம் செலுத்த வேண்டும். இதுபோன்ற மையங்கள் நடத்துபவர்கள் குறித்து கணக்கெடுக்க வேண்டும். இவற்றில் நேரடியாக திடீர் ஆய்வு நடத்துவதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அப்பகுதி ஸ்டேஷனில் உள்ள அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Leave a Reply