4 முறை வங்கப்புலியை விரட்டிய இந்தியா! தொடரும் வரலாறு

இந்திய அணி வங்க தேசத்திற்கு எதிரான போட்டியில் 4 விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென்களுடன் களம் கண்டது. தோனி, ரிசர்ப் பந்த், தினேஷ் கார்த்திக், கே.எல். ராகுல் ஆகிய 4 விக்கெட் கீப்பர்களுடன் வங்க தேசத்தை எதிர் கொண்டது இந்தியா. தோனி விக்கெட் கீப்பிங் செய்ய மற்ற மூவரும் ஃபீல்டர்களாக செயல்பட்டனர். வங்க தேசத்திற்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதன் மூலம் வங்க தேசம் அரைஇறுதிக்கு தகுதி பெறாமல்,நடப்பு தொடரிலிருந்து வெளியேறியது.

 

இதில் ஸ்வாரஸ்யமான அம்சம் ஒன்று உள்ளது. கடைசியாக நடைபெற்ற 4 உலக கோப்பை தொடர்களிலும் இந்திய அணியே சம்பந்தப்பட்ட போட்டிகளில் வங்க தேச அணியை வீழ்த்தி அந்த தொடரிலிருந்து வெளியேற்றி இருக்கிறது. அதாவது 2015 ஆம் ஆண்டு உலக கோப்பை 2016 டி20 உலக கோப்பை, 2017 சேம்பியன்ஸ் கோப்பை, நடப்பு உலக கோப்பை ஆகிய தொடர்களில் இந்தியாவுடன் தோல்வி உற்றே வங்க தேச அணி வெளியேறியது.

 

போட்டியில் ரோஹித் ஷர்மா அடித்த சிக்சர் ஒன்று ரசிகர் ஒருவரின் மேல்பட அவர் காயமடைந்தார். போட்டி முடிவடைந்த பிறகு ரோஹித் ஷர்மா அந்த ரசிகரை சந்தித்து நலம் விசாரித்து தான் கையொப்பம் இட்ட தொப்பி ஒன்றை அவருக்கு வழங்கினார். இந்த நெகிழ்ச்சியான நிகழ்வை பலரும் சுட்டிக்காட்டி ரோஹித் சர்மாவை பாராட்டி வருகிறார்கள். போட்டியில் ரோஹித் ஷர்மா சதம் அடித்ததன் மூலம் தொடக்க வீரராக களம் இறங்கி அதிக சதம் அடித்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையையும் அவர் தனது ஆக்கினார்.

 

22 சதங்கள் சேர்த்து பட்டியலில் ரோஹித் ஷர்மா 5 வது இடத்தில் இருக்கிறார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் 4 வீரர்களை போல்ட் செய்து அமர்க்களப்படுத்தினார். இதன் மூலம் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் 4 விக்கெட்டுகளை போல்ட் செய்து ஆட்டமிழக்க செய்வது இதுவே முதன் முறையாகும்.


Leave a Reply