சர்வதேச கராத்தே போட்டியில் கோவையை சேர்ந்த பள்ளி மாணவர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்று சாதனை

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் கோவையை சேர்ந்த பள்ளி மாணவர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.மலேசியா நாட்டின் ஜோகுர் நகரில் சர்வதேச அளவிலான கராத்தே சாம்பியன் ஷிப் போட்டி கடந்த 22 ந்தேதி நடைபெற்றது. போட்டியில் இந்தோனேசியா, மலேசிய, சிங்கப்பூர், இலங்கை, நேபாளம், ஜப்பான்,தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்றனர்.

இதில் JKTC சிரில் கராத்தேடூ இந்தியாவின் அமைப்பை சேர்ந்த தலைமை பயிற்சியாளர் ரென்ஷி சிரில் வினோத் தலைமையில் கோவைஙபுனித ஜோசப் பள்ளியில் பயிலும் பிரத்யுமன் மற றும் ரிஷி ஆதி நாராயணன் ஆகிய இருவர் போட்டியில் பங்கேற்றனர்.இதில் பிரத்தியுமன் குமிட்டோவில் முதலிடத்தையும்,கட்டாவில் இரண்டாவது இடத்தையும் பிடித்தார்.இதேபோல நடந்த மற றொரு போட டியில் ரிஷி குமிட்டோவில் முதல் இடத்தையும், கட்டாவில் மூன்றாவது இடத்தையும் பிடித்தார்.வெற்றி பெற்று திரும்பிய இரு மாணவர்களுக்கும் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பள்ளியின் முதல்வர் மரிய ஜோசப் மாணவர்களை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.


Leave a Reply