தோல்விக்கு தோனி தான் காரணமா? ஆதரவும், எதிர்ப்பும்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பர்மிங் ஹம்மில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவிற்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 337 ரன்களை குவித்தது. இதையடுத்து விளையாடிய இந்தியா 306 ரன்கள் மட்டுமே எடுத்து 31 ரன்களில் தோல்வி அடைந்தது.இந்திய அணியின் தோல்விக்கு காரணம் நட்சத்திர வீரர் தோனியின் செயல்பாடு தான் என விமர்சனங்கள் எழுந்து உள்ளன.

 

ஆட்டத்தின் 40 வது ஓவரில் ரிசப் பந்த் வெளியேறிய போது உள்ளே வந்தார் தோனி. அப்போது இந்திய அணி வெற்றி பெற 112 ரன்கள் தேவைபட்டது.அதாவது ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் தேவைப்பட்டது. ஐபிக‌எல் போட்டி போன்ற இந்த கால கட்டங்களில் இது எட்டக்கூடிய இலக்கு தான். ஆனால், கேம் பினிஷர் என ரசிகர்களால் கொண்டாடப்படும் தோனியின் ஆட்டம் மிகுந்த ஏமாற்றம் தந்தது.

 

31 பந்துகளை சந்தித்த தோனி 3 பௌண்ட்ரி, 1 சிக்சர் உட்பட 42 ரன்களை எடுத்தார். எனினும் வழக்கமான ஆக்ரோஷமான ஆட்டம் வெளிப்படவில்லை.குறிப்பாக கேதர் ஜாதவுடன் இணைந்து கடைசி ஓவர்களில் 39 ரன்களை மட்டுமே தோனியால் சேர்க்க முடிந்தது.வெற்றி பெறுவதற்கு சிறு முனைப்பு கூட காட்டாத தோனி மற்றும் கேதர் ஜாதவ் ஆட்டத்தை கண்ட ரசிகர்கள் சிலர் கடைசி ஓவர் வீசப்படுவதற்கு முன்னதாக மைதானத்தில் இருந்து கிளம்பிவிட்டனர்.

 

5 விக்கெட் கை வசம் இருந்த நிலையில் வெற்றிக்கு முயற்சிக்காத இந்திய வீரர்களின் செயல்பாடு குறித்து டி‌வி வர்ணனையில் இருந்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் உசைன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சக வர்ணனையாளரான இந்தியாவின் கங்கோலி என்ன விளக்கம் அளிப்பது4 என்றே தெரியவில்லை என்றார். இதே போல சமூக வலைதளங்களிலும் தோனியின் பேட்டிங் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது.

 

பலரும் தொடர்ந்து தோணியை விமர்சித்து வரும் நிலையில் தோனி என்ற ஹேஷ் டேக் உலக் அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. தோனிக்கு எதிராக பலர் இருக்கும் நிலையில் அவருக்கு ஆதரவான குரல்களும் இல்லாமல் இல்லை. இந்திய அணியின் சார்பில் அடிக்கபட்ட ஒரே சிக்சர் தோனி அடித்தது தான் என சிலர் கூறியிருக்கிறார்கள்.


Leave a Reply