கோவையை சேர்ந்த 100 வயதான பத்மஸ்ரீ யோகா புகழ் ஞானாம்பாள் பாட்டி பல்வேறு ஆசனங்கள் செய்து கூடியிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தினார்

கோவை கணுவாய் பகுதியில் உள்ள பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவையை சேர்ந்த 100 வயதான பத்மஸ்ரீ யோகா புகழ் ஞானாம்பாள் பாட்டி பல்வேறு ஆசனங்கள் செய்து கூடியிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தினார்.சர்வதேச யோகா தினத்தையொட்டி பள்ளிகளில் மாணவர்களிடையே யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

 

இந்நிலையில் கோவை கணுவாய் பகுதியில் உள்ள எஸ்.ஆர். லீடர்ஸ் பப்ளிக் பள்ளியில் சர்வதேச யோகாதினம் கொண்டாடப்பட்டது.பள்ளியின் தாளாளர் ராசிகா கோகுல கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக 100 வயதான பத்மஸ்ரீ யோகா புகழ் ஞானாம்பாள் பாட்டி கலந்து கொண்டார்.இதில் கலந்து கொண்ட அவர் தனது ஆரோக்கிய வாழ்வில் யோகாவின் பங்கு குறித்து பேசியதோடு சில ஆசனங்களையும் செய்து காண்பித்து கூடியிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

முன்னதாக பள்ளியில் யோகா குறித்த பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, வினாடி வினா போட்டி, யோகாசன போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.இதில் சிறந்த மாணவர்களுக்கு வி.கே.வி.குழுமங்களின் தலைவர் சுந்தர்ராஜன் பரிசுகள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். உடற்கல்வி இயக் குனர்கள் மூலமாக மாணவ, மாணவிகளுக்கு பள்ளி வளாகத்தில் யோகா பயிற்சியில் 100 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் யோகா பயிற்சிகள் செய்தனர்.


Leave a Reply