காதலிக்க மறுத்த இளம் பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்திய இளைஞர் ! பதரவைக்கும் காட்சி

காதலிக்க மறுத்த இளம் பெண்ணை இளைஞர் சரமாரியாக கத்தியால் குத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. அந்த இளைஞர் தனது உடலிலும் கத்தியால் குத்தி கொண்டு அந்த பெண் முன்னே விழுந்தார். கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள பகுதியில் குறுகிய பாலம் ஒன்றில் இச்சம்பவம் நிகழ்ந்தது. அந்த பெண் கதறி துடித்தும் அதை ஒரு பொருட்டாக கருதாமல் அவரை இளைஞர் சரமாரியாக கத்தியால் குத்துகிறார். ரத்தம் சொட்ட சொட்ட அந்த பெண் துடித்து கொண்டிருக்க அந்த இளைஞர் தனது கழுத்து பகுதியில் கத்தியால் வெட்டி கொள்கிறார்.

 

சில நிமிடங்களில் அப்பகுதிக்கு வந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மேல் தளத்தில் இருந்த ஒருவர் இச்சம்பவத்தை தனது மொபைலில் படம் பிடித்து வெளியிட்டு இருக்கிறார். ஆனால் அந்த இளம் பெண்ணை கத்தியால் குத்திய இளைஞரை தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவரது கவனம் முழுவதும் கத்தி குத்தை படம் பிடிப்பதில் தான் இருந்தது.


Leave a Reply