நவீனமாகி வரும் காலகட்டத்தில் எல்லோர் கையிலும் ஆண்டிராய்டு மொபைல் ஃபோன்கள்.அதில் பல்வேறு பேஸ்புக்,வாட்ஆப்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம் போன்ற பல்வேறு சமூக வலைத்தளங்களின் வாயிலாக நொடிப்பொழுதில் மக்களை சென்றடைந்து விடும்.இந்தியாவில் தற்போது 4 G அலைவரிசை பயன்படுத்தி வருகிறோம்.தற்போது இந்த ஆண்டிராய்டு போன்களின் மூலம் இருந்த இடத்தில் இருந்து கொண்டே ஆன் லைன் மூலம் உணவு,ஆடை,ஆபரணங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பட்ட பொருட்களை வாங்கி வருகின்றனர்.
நவீன மயமாகி வரும் காலத்திற்கேற்ப உள்ளாட்சித்துறையும் தற்போது நவீன மயமாகி வருகிறது. முன்னெல்லாம் பேரூராட்சிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதியில் குடிநீர்,தெருவிளக்கு,நகரத்தூய்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருந்தால் பேரூராட்சி அலுவலகத்திற்கு கால் கடுக்க நடந்து சென்று மனுக்களை எழுதி நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்து தங்களது பிரச்சினைகளை சரிசெய்து வந்தனர்.சில சமயங்களில் அவர்களது அடிப்படைத்தேவைகளுக்காக ஒரு நாள்,இரண்டு நாட்கள் என தங்களது வேலையை விட்டு அலைந்து திரிய வேண்டிய நிலை இருந்து வந்தது.
இதனால் மக்களின் காலம் விரையமாவதோடு,அன்றாட பணிகள் பாதிக்கப்படுவதோடு,மனதளவிலும் பாதிக்கப்பட்டு வந்தனர்.இந்த நிலையை தவிர்க்கும் பொருட்டு பேரூராட்சிகளில் தற்போது ” ஹலோ பேரூராட்சி ” வாட்ஸ்அப் ( WhatsApp ) வழி புகார் பதிவு சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இச்சேவை குறித்த விளம்பர பதாகைகள் பேரூராட்சிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விளம்பரத்தில் பேரூராட்சிகளின் செயல் அலுவலரின் வாட்ஸ்ஆப் செல்போன் எண் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குடிநீர்,தெருவிளக்கு,நகர்தூய்மை குறித்த புகார்களை கொடுக்க ‘கால்’ கடுக்க நடந்து வர வேண்டாம்.’கால்’ செய்ய வேண்டாம் போனில்,’கால்’ பக்க,முழு பக்க மனுவும் வேண்டாம்.விரல் நுனியில் புகார் பதிவு சேவை எனவும்,குடிநீர்,தெருவிளக்கு,நகர்தூய்மை குறித்த புகார்களை செயல் அலுவலரின் வாட்ஸ்ஆப் எண்ணிற்கு புகார்களை அனுப்பலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்களின் குடிநீர்,தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் உடனுக்குடன் நிவர்த்தி செய்ய பேரூராட்சி நிர்வாகத்தின் முயற்சி வரவேற்க தகுந்தது.மக்களும் இனி தங்களது வேலைகளை விட்டு பேரூராட்சிகளுக்கு அலைந்து திரிய வேண்டிய நிலை ஏற்படாது என்பதால் இச்சேவையை மக்கள் வரவேற்றுள்ளனர்.பேரூராட்சிகளின் இந்த முயற்சி பொது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இச்சேவை குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் நம்மிடம் கூறுகையில் ” மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர்,தெருவிளக்கு,தகர்தூய்மை உள்ளிட்ட புகார்களை நேரில் கொடுக்காமல் தங்களது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பினாலோ,தெரிவித்தாலோ புகாரளித்த சில மணி நேரங்களில் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,இதனால் மக்களுக்கான காலவிரயம் முற்றிலுமாக தடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.மேலும்,மக்கள் இச்சேவையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.பேரூராட்சிகளின் இந்த நல்ல முயற்சி நிச்சயமாக வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை.