சென்னையில் புதிதாக 2 லட்சம் மழை நீர் சேமிப்பு தொட்டிகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார். மழை நீர் சேமிப்பு திட்டத்தை தீவிரப்படுத்துவது மற்றும் தொட்டிகளை புனரமைப்பது குறித்த கருத்தரங்கு அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. சென்னையில் உள்ள 200 வார்டுகளில் ஒரு வார்டுக்கு தலா 1000 மழைநீர் சேமிப்பு தொட்டிகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்காக மண்டல அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குழுவானது வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொள்வதுடன் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.
மேலும் செய்திகள் :
நடிகை ப்ரீத்தி முகுந்தன் அழகிய போட்டோஷூட்..!
அரசு மருத்துவமனையிலேயே ஒரு தாயின் மடியில் இருந்து குழந்தை பறிபோகும் அவலம்: விஜய் கண்டனம்
பின்னால் வந்த வாகனம் மோதல்..சம்பவ இடத்திலே பலி..!
கோவையில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி..!
நயினார் நாகேந்திரன் எல்லாம் ஒரு ஆளா? செங்கோட்டையன் பதிலடி
நயினாரை நாகேந்திரன் விமர்சனம்: பா.ஜ.க பெண் தலைவர்கள் மவுனம் காப்பது அநீதி - கனிமொழி என்.வி.என்.சோமு






