ஓடும் ரயில் முன்பு செல்ஃபி எடுத்த மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு

புதுக்கோட்டை அருகே  ஓடும் ரயில் முன்பு செல்ஃபி எடுத்த கல்லூரி மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். புதுக்கோட்டை மச்வாடியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் துறை குமாரவேல் என்பவரின் மகன் மணிகண்டன்.இவர் புதுக்கோட்டை சிவபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

 

இந்நிலையில் மணிகண்டன் தனது நண்பருடன் ரயில்வே பாலத்தில் பேசிக் கொண்டிருந்த போது அவ்வழியே வந்த ரயில் முன்பு மணிகண்டன் செல்ஃபி எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதில் எதிர் பாராதவிதமாக ரயில் மோதி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் மகேந்திரன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் நடத்தி வருகின்றனர்.


Leave a Reply