ஒவ்வொரு ஆண்டும் மே 1 தொழிலாளர் தினத்தன்று தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டு கோவையில் சூலூர்,கரூரில் அரவக்குறிச்சி உள்ளிட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் காரணமாக மேலே குறிப்பிட்ட நான்கு மாவட்டங்களில் ஊராட்சிகளில் நடத்த வேண்டிய கிராம சபை கூட்டங்கள் தள்ளி வைக்கப்பட்டன.தள்ளி வைக்கப்பட்ட கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்களை இன்று நடத்த கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவுறுத்தியிருந்தார்.
அதன் ஒருபகுதியாக கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கெம்மாரம்பாளையம், தேக்கம்பட்டி, மருதூர்,சிக்கதாசம் பாளையம் உள்ளிட்ட 17 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் இன்று நடத்தப்பட்டன.அதன்படி தேக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிட்டாம்பாளையத்தில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலர் சதீஸ்குமார் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் கடந்த 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு,செலவு கணக்குகள் பொதுமக்கள் மத்தியில் சமர்பிக்கப்பட்டது.
விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் பொருட்டு மழை நீரை சேமிக்கும் நோக்கில் வரப்புகளை அமைத்தல்,100 நாள் வேலை உறுதி திட்டம்,குடிநீர் சிக்கனம்,சாலை வசதிகளை மேம்படுத்துதல்,பிளாஸ்டிக் ஒழிப்பு,திடக்கழிவு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும், பசுமை வீடுகளுக்கான பயனாளிகள் தேர்வு உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. மேலும்,மண்புழு உரம் தேவைப்படுவோர் ஊராட்சிகளை அணுகி பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.கூட்டத்தில் காரமடை ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள்,தேக்கம்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் தங்கராஜ் உட்பட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கெம்மாரம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பனப்பாளையம் புதூரில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலர் ராஜேஷ்குமார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் கடந்த 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு,செலவு கணக்குகள் பொதுமக்கள் மத்தியில் சமர்பிக்கப்பட்டது.விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் பொருட்டு மழை நீரை சேமிக்கும் நோக்கில் வரப்புகளை அமைத்தல்,100 நாள் வேலை உறுதி திட்டம்,குடிநீர் சிக்கனம்,சாலை வசதிகளை மேம்படுத்துதல்,பிளாஸ்டிக் ஒழிப்பு,திடக்கழிவு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மேலும்,பசுமை வீடுகளுக்கான பயனாளிகள் தேர்வு உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. மேலும்,மண்புழு உரம் தேவைப்படுவோர் ஊராட்சிகளை அணுகி பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.கூட்டத்தில் காரமடை ஊராட்சி ஒன்றிய சாலை ஆய்வாளர் செல்வராஜ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள்,முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பொன்னுசாமி உட்பட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.மருதூர் ஊராட்சிக்குட்பட்ட புங்கம்பாளையம் பதூரில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலர் செந்தில்குமார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கடந்த 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு,செலவு கணக்குகள் பொதுமக்கள் மத்தியில் சமர்பிக்கப்பட்டது.விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் பொருட்டு மழை நீரை சேமிக்கும் நோக்கில் வரப்புகளை அமைத்தல்,100 நாள் வேலை உறுதி திட்டம்,குடிநீர் சிக்கனம்,சாலை வசதிகளை மேம்படுத்துதல்,பிளாஸ்டிக் ஒழிப்பு,திடக்கழிவு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.மேலும்,பசுமை வீடுகளுக்கான பயனாளிகள் தேர்வு உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
மேலும்,மண்புழு உரம் தேவைப்படுவோர் ஊராட்சிகளை அணுகி பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் காரமடை ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி உள்ளிட்ட அரசு அதிகாரிகள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கராஜ்,துணைத்தலைவர் ராமசாமி உட்பட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.இதே போல் சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலர் செந்தில்குமார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் கடந்த 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு,செலவு கணக்குகள் பொதுமக்கள் மத்தியில் சமர்பிக்கப்பட்டது.
விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் நோக்கில் மழை நீரை சேமிக்கும் பொருட்டு வரப்புகளை அமைத்தல்,100 நாள் வேலை உறுதி திட்டம்,குடிநீர் சிக்கனம்,சாலை வசதிகளை மேம்படுத்துதல்,பிளாஸ்டிக் ஒழிப்பு,திடக்கழிவு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும், பசுமை வீடுகளுக்கான பயனாளிகள் தேர்வு உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. மேலும், மண்புழு உரம் தேவைப்படுவோர் ஊராட்சிகளை அணுகி பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.கூட்டத்தில் காரமடை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி(கிராம ஊராட்சி), துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராம மூர்த்தி(தணிக்கை),கிராம நிர்வாக அலுவலர் மூர்த்தி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உட்பட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.