தங்க தமிழ்செல்வன் எந்த கட்சிக்கு செல்வார் என்று அன்றே கூறியது குற்றம் குற்றமே புலனாய்வு வார இதழ்

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் நடந்து முடிந்த தேர்தல் மிக முக்கியமான ஒன்று ஆகும். இதில் தமிழகத்தை இந்தியா முழுவதும் உற்று நோக்கும் வகையில் அமைத்தது. ஏனெனில் தமிழகத்தில் இரு முக்கிய தலைவர்கள் இல்லாத தேர்தல்.இந்நிலையில் தமிழகத்தில் டி டி வி தினகரனை தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் வியந்து பார்க்கும் அளவுக்கு பேசப்பட்டது இவரின் அரசியல் வாழ்வில் முக்கிய பங்கு வகித்தவர் தான் தங்கத்தமிழ்செல்வன்.

நடந்து முடிந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தது டி டி வி தினகரன் கட்சி, இதனால் இந்த கட்சியில் பயணித்த பலர் நம் அரசியல் வாழ்க்கை இத்துடன் முடிந்து விடுமோ என்ற அச்சத்தால் மாற்று கட்சிக்கு தாவத் தொடங்கினர்.இந்நிலையில் தான் அரசியல் வாழ்க்கை முடிந்து விடுமோ என்ற அச்சத்தால் தங்கத்தின் செல்வனின் இந்த ஆடியோ மூலம் வெளிபடுவதாக அ தி மு க மற்றும் அ ம மு க தொண்டர்கள் மத்தியில் கிசுகிசுக்கப்படுகிறது.

பொருத்திருந்து பார்க்கலாம் தங்கத்தமிழ்செல்வன். அ ம மு க- வுக்கு தங்கமா ! தகரமா !! என்று வெளியிடப்பட்டது குற்றம் குற்றமே இணைய தளத்தில் தற்போது அது உண்மை என்று நிரூபணம் ஆகியுள்ளது தி மு க- வில் தங்க.தமிழ்செல்வன் இணைந்தது மேலும் கட்சியில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவது;ஒற்றை தலைமையில் இருக்கும் கட்சிதான் வெற்றிகரமாக செயல்பட முடியும், அதனால்தான் திமுக மிகப்பெரிய வெற்றி பெற்றது என்றும்ஆளுமை மிக்க தலைவர் ஸ்டாலின் என்றும் துணிச்சலான முடிவுகளை எடுக்கக் கூடியவர், திமுக தலைவர் ஸ்டாலின் என்று கூறினார்.


Leave a Reply