மருத்துவமனை வளாகத்தில் தாறுமாறாக வாகனங்களை நிறுத்தும் வாகன ஓட்டிகள் !

இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் இல்லாததால் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் உள்பட அதன் உறவினர்களும் மன உளைச்சலும் அடைந்து வரும் நிலையில் காவல்துறை வாகனம் TN-65-G-0550 எண் கொண்ட டிரைவர் எங்களை யார் கேள்விகள் கேட்க முடியும் என்று சொல்லி விட்டு மருத்துவ வளாகத்தில் நிறுத்தி விட்டு சென்று விட்டார்.

அதனால் பாதசாரிகள் உள்பட பலர் வேதனையடைந்தனர் . இந்த ஓட்டுநர் செய்த தவறால் அனைத்து காவல்துறையினருக்கும்.அவப் பெயர் பொதுமக்கள் மத்தியில் உருவாக வாய்ப்புள்ளது என்று இந்த மருத்துவ வளாகத்தில் கிசுகிசுக்கப்பட்டது.இது மாதிரியான ஓட்டுநர்களை தவிர்க்கலாமே. இனிமேல் இதுபோன்று நடக்காமல் இருக்க மருத்துவமனை நிர்வாகமும் காவல்துறை நிர்வாகமும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் சமூக ஆர்வலர்கள்…


Leave a Reply