சென்னையில் 4 வயது சிறுமியை கொலை செய்து சடலத்தை கழிவறைக்குள் மறைத்து வைத்த கொடூரம்

Publish by: --- Photo :


சென்னை அருகே 4 வயது சிறுமியை கொலை செய்து கழிப்பறையில் மறைத்து வைத்திருப்பதாக அவரது உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னையில் காவல் நிலையம் அருகில் உள்ள அந்தோணி நகரை சேர்ந்த ராஜேந்திரன் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பணியாற்றி வருகிறார். நேற்று மதியம் இவர் வேலைக்கு சென்று இருந்த நிலையில் மாலையில் மனைவி தனது மகனை டியூசனுக்கு அழைத்து சென்றுள்ளார்.

 

அப்போது அவர்களது 4 வயது மகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.டியூசனுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய செல்வி வீட்டில் தமது மகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.பல்வேறு இடங்களில் தேடிய நிலையில் வீட்டின் பின்புறம் உள்ள கழிவறைக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு கொலை செய்யபட்ட நிலையில் சிறுமியின் உடல் வாலியில் திருப்பி வைக்கபட்டிருப்பது கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

 

சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் பக்கத்து வீட்டில் வசிக்கும் ராஜேந்திரனின் உறவினரான 60 வயது நிரம்பிய முன்னாள் ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


Leave a Reply