இன்று கூடுகிறது தமிழக சட்ட பேரவை

பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு இடையே தமிழக சட்ட பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.இன்று காலை 10 மணிக்கு சட்ட பேரவை கூடியதும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் சுந்தரதாஸ், பஞ்சவர்ணம் , சுப்ரமணியம், செல்வராஜ், சுந்தர வேல், ராமநாதன், முனுசாமி மற்றும் சிவசுப்ரமணியன் ஆகிய 7 பேரின் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட உள்ளது. மேலும் மறைந்த சட்ட மன்ற உறுப்பினர்கள் கனக ராஜ் மற்றும் ராதா மணி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து , தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு சபை ஒத்திவைக்கபட உள்ளது.

 

இதனை தொடர்ந்து திமுக மற்றும் மதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் தனித்தனியே நடைபெற உள்ளது.திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சி எம்‌எல்‌ஏக்கள் கூட்டம் காலை 11மணியளவில் அண்ணா அறிவாலயத்திலும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சி எம்‌எல்‌ஏக்கள் கூட்டம் காலை 11.30 மணிக்கு ராயபேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்திலும் நடைபெறுகிறது. மானிய கோரிக்கைகள் மீதான சட்ட பேரவைக் கூட்டம் ஜூலை 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


Leave a Reply