--- --:--:-- --

தமிழகத்தில் கொலை அதிகரிக்கவில்லை – நடப்பாண்டு 1,267 வழக்குகள் பதிவு

8

தமிழகத்தில் தீபாவளி அன்று 11 கொலைகள் நடந்துள்ளது. மேலும். தமிழ்நாட்டில் கொலைகள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தனர். அதுமட்டுமல்லாமல், சமூக வலைதளத்திலும் பல பதிவுகள் பரவி வந்தது. இந்நிலையில், தமிழகத்தில் கொலைகள் அதிகரிக்கவில்லை என்று காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டு உள்ளது.

 

 

இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த 5 ஆண்டுகளில் சராசரியாக 1,323 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. நடப்பாண்டு இதுவரை 1,267 கொலை வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு உள்ளது. குடும்ப தகராறால் 28%, சிறிய தகராறுகளில் 23% கொலைகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

 

முறையற்ற உறவு, மதுபோதையால் தலா 13% கொலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 3,077 கொலை வழக்குகளில் தொடர்புடைய 95.3% குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 20,450 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 1,698 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon