பாஜக எம்‌பிக்கள் வெள்ளி மற்றும் திங்கள் கிழமை ஆஜராக வேண்டும்

Publish by: --- Photo :


நாளை மற்றும் ஜூலை முதல் தேதி பாஜகவின் அனைத்து எம்பிக்களும் மக்களவையில் ஆஜராகுமாறு பாஜக கொறடா மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சில முக்கிய மசோதாக்களை மக்களவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முத்தலாக் தடுப்பு சட்ட மசோதா, மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா போன்றவை அரசின் பரிசீலனையில் உள்ளன. மக்களவையில் மொத்தம் உள்ள 542 இடங்களில் பாஜகவிற்கு 303 இடங்களுடன் பெரும்பான்மை பலம் உள்ளதால் எந்த மசோதாவையும் எளிதாக நிறைவேற்ற வாய்ப்பு உள்ளது.


Leave a Reply