கங்காநகர் பொது மக்கள் ஆட்சியரிடம் பரபரப்பு புகார் மனு

கங்காநகர் மகளிர் சுயஉதவி குழு ரேசன் கடை கடையில் ஆளும் கட்சியினர் செயல்பாட்டால் பொது வினியோகத் திட்டம் முடங்கும் அபாயம்.திருப்பூர் மாநகரம் 30 வது வார்டில் உள்ள கஸ்தூரி பாய் மகளிர் சுயஉதவி குழுவே தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் இந்த ரேசன் கடையில் ஆளும் கட்சியை சேர்ந்த சில நபர்களால் ஏற்பட்டு பாதிப்புகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 50 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் புகார் மனு அளித்தனர்.

 

அதில் கூறப்பட்டுள்ளதாவது, திருப்பூர் மாநகரம் 30 வது வட்டம் பி.என்.ரோடு போயம்பாளையம் மேற்கு கங்காநகரிலுள்ள கஸ்தூரி பாய் மகளிர் சுயஉதவி குழு ரேசன் கடையை கடந்த 15 ஆண்டுகளாக மகளிர் சுயஉதவி குழுவினர் தான் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஆளும் கட்சியை சேர்ந்த சில நபர்கள் இந்த பொது விநியோக கடை சரிவர நடப்பதில்லை என்று பொய்யான தகவல்களை கூறி மக்களை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இச்செய்தியை அறிந்த நாங்கள் இப்பகுதியில் விசாரித்து பார்த்ததில் கடையின் மீதுள்ள காழ்புணர்ச்சி காரணமாக தான் தங்கள் சுயலாபத்துக்காக ஆளும் கட்சியினர் தொடர்ந்து செயல்படுகின்றனர் என்பது தெரிய வருகிறது. எனவே இதன் மீது தாங்கள் உரிய முறையில் விசாரணை நடத்தி கங்காநகர் பகுதியில் கஸ்தூரி பாய் மகளிர் சுயஉதவி குழு ரேசன் கடை தொடர்ந்து சிறப்பாக நடைபெற ஆவணம் செய்ய வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Leave a Reply