தர்பூசணி பழம் மட்டும் அல்ல அதன் விதை கூட பயன் தான்

தர்பூசணி பழத்தைத் தான் ஆங்கிலத்தில் வாட்டர்மெலன் என்று கூறுவோம். இது கோடைகாலங்களில் மட்டும் கிடைக்கக்கூடிய பழம். இதை குழந்தைகள் அந்த விதைகள் நமது உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது. தர்பூசணி விதைகளை வறுத்தோ அல்லது நீரில் போட்டு கொதிக்க வைத்தோ அந்த நீரைக் குடித்தால், ஏராளமான மருத்துவ நன்மைகளை பெறலாம்முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுவார்கள்.

 

ரத்த சர்க்கரை
தர்பூசணி சாப்பிட்டு விட்டு அதன் விதைகளை உலர்த்தி சேமித்து வையுங்கள். அது ஒருபோதும் கெட்டுப் போகாது. அப்படி சேமிக்கப்பட்ட ஒரு கையளவு தர்பூசணி விதையை எடுத்துக் கொண்டு அதை 1 லிட்டர் நீரில் சேர்த்து 15 நிமிடம் கொதிக்க வைத்து, பின் அதை வடிகட்டி குளிரவைத்து 3 நாட்கள் தொடர்ந்து குடித்தால், ரத்த சர்க்கரையின் அளவு குறைவதோடு, சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

 

இதய ஆரோக்கியம்
பொதுவாக இதயத்தில் ஏதேனும் பிரச்சினை என்றாலே இவ்வளவு மருத்துவ வசதி வந்துவிட்ட பின்னும் கூட பயம் நன்மைவிட்டு போவதில்லை. ஏனென்றால் எந்த நேரத்தில் என்ன ஆனுமென்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால் இதயம் ஆரோக்கியமாக இருக்க, தர்பூசணி விதைகளை நீரில் கொதிக்க வைத்து, அந்நீரை தொடர்ச்சியாகக் குடித்து வர வேண்டும் என்று ஆய்வு கூறுகிறது. இதனால் எந்தவித பக்க விளைவுகள் ஏதும் இல்லையென்பால் முயற்சித்துப் பார்ப்பதில் தவறு ஏதும் இல்லையே.

தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்த பெண்களுக்கு நீளமான தலைமுடியும் ஆண்களுக்கு கருகருவென ஆரோக்கியமான, அழகான மற்றும் வலிமையான தலைமுடி இருந்தால் யாருக்குத் தான் பிடிக்காது. ஆனால் நமக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சினையே இந்த தலைமுடி உதிர்வது தானே. வேண்டுமெனில், அதற்கு தர்பூசணி விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரை குடித்து வந்தால், தலைமுடி உதிர்வது, தலை அரிப்பு பொடுகு போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படும்.

 

சருமச் சுருக்கம் இயந்கையாகவே நம்மை நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள நம்முடைய உடலுக்கு ஆண்டி ஆக்சிடண்ட்டுகள் அதிக அளவில் தேவைப்படுகின்றன. அவற்றை பொதுவாக நாம் உண்ணுகின்ற உணவுகளின் வழியாகத் தான் பெறுகிறோம். அந்தவகையில் இயற்கையாகவே ஆண்டி ஆக்சிடண்ட்டுகள் நிறைந்த உணவுகளில் முக்கியமான ஒன்றாக தர்பூசணி இருக்கிறது. பழத்தைப் போலவே அதன் விதைகளிலும் அதிக அளவில் இருக்கிறது. தர்பூசணி விதைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளன. அதனால் இது நம்முடைய சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களைப் போக்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது.


Leave a Reply