சென்னையில் ஒரே நாளில் 10 இடங்களில் செயின் பறிப்பு

Publish by: --- Photo :


சென்னையில் நேற்று முன் தினம் ஒரே நாளில் 10 இடங்களில் பெண்களிடம் செய்னை பறித்து கொண்டு தப்பி சென்றவர்களில் ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். தேனாம் பேட்டை, சீத்தம்மாள் காலனியில் நடந்து  சென்ற பெண்  ஒருவரின் கழுத்தில் இருந்த சங்கிலியை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் இருவர் பறித்து சென்றனர்.

 

அங்குள்ள சி‌சி‌டி‌வியில் பதிவாகி இருந்த காட்சியை வைத்து சென்னை மூலக்கடையை சேர்ந்த ராகேஷ் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். தேனாம் பேட்டை,திருமங்கலம், போன்ற 8 இடங்களிலும் இவர்கள் இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டனர். ராகேஷுடன் இரு சக்கர வாகனத்தில் வந்த மற்றொரு நபர் தலை மறைவாகிவிட்டார். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி  வருகின்றனர்.

 

இவர்கள் இருவரும் தேனாம் பேட்டை மட்டுமின்றி ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட 10 இடங்களில் தெருவில் நடந்து சென்ற பெண்களிடம்   செய்னை  பறித்து கொண்டு சென்றுள்ளனர். 24 மணி நேரத்தில் அதுவும் பட்ட பகலில் செய் பறிப்பு நடைபெற்றது மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது.


Leave a Reply