வாட்ஸ்-ஆப்பின் புதிய அப்டேட்! விரைவில்

உலகம் முழுவதும் அதிக நபர்களால் பயன்படுத்தப்படும் தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்-ஆப் தனது பயனர்களுக்கான புதிய அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. உலக அளவில் பல கோடி மக்கள் உபயோகப்படுத்தும் வாட்ஸ்-ஆப்பை ஃபேஸ் புக் நிறுவனம் விலைக்கு வாங்கியதும், அடுத்தடுத்த அப்டேட்டுகளை வழங்கி வருகிறது.

 

அந்த வகையில் தற்போது பயனாளர்களுக்கு புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ்-ஆப் அறிமுகப்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட பிக்சர் இன் பிக்சர் வசதியின் மூலம் வாட்ஸ்-ஆப் வீடியோக்களை வாட்ஸ்-ஆப்பிலேயே பிளே செய்து பார்க்கும் வசதி உள்ளது. ஆனால் வாட்ஸ்-ஆப் சாட்டிங்கை விட்டு வெளியேறினால் வீடியோ பிளே ஆவது நின்றுவிடும்.

 

தற்போது இதை மேம்படுத்தும் விதமாக வாட்ஸ்-ஆப் சாட்டிங்கில் இருந்து வெளியேறி வேறு செயலியையோ இணைய தளத்தையோ பார்த்தாலும் பின்னனியில் வீடியோ பிளே ஆகி அதன் ஆடியோவை தொடர்ந்து கேட்கலாம். திரையை இரண்டு பாகமாக பயன்படுத்த கூடிய போன்களில் வீடியோவை தொடர்ந்து பார்த்தபடி வேறொரு செயலி அல்லது இணைய தளத்தை தொடர்பு கொள்ளலாம்.

 

இந்த வகையில் புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ்-ஆப் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் வாட்ஸ்-ஆப்பில் இருந்து வெளியேறி தான் வேறொரு செயலிகள், இணைய தளங்களை காணும் நிலை தவிர்க்கப்படும்.


Leave a Reply