மேகதாதுவில் அணை கட்ட அனுமதித்தால் தான் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கப்படும்: கர்நாடக அரசு

மேக தாதுவில் புதிய அணை கட்ட அனுமதி அளித்தால் தான் தமிழகத்திற்கு தொடர்ச்சியாக 177.25 டி‌எம்‌சி நீரை கொடுக்க முடியும் என மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்திற்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது.இது தொடர்பாக அம்மாநில காவிரி நீர் வாரிய தலைமை பொறியாளர் எழுதியுள்ள கடிதத்தில் பெங்களூரு பகுதிகளில் குடிநீர் தேவை அதிகரித்து உள்ளதாகவும், அதனை ஈடு செய்யவும் 400 மெகாவாட் நீர் மின்சாரம் தயாரிக்கவும, அணை கட்ட அனுமதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டு உள்ளது.

 

9000 கோடியில் 5,252 ஹெக்டேர் பரப்பளவில் அணை கட்ட மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், அதனை நிறைவேற்ற மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்தின் அனுமதி தேவைப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேகதாது அணை தமிழகத்தின் எல்லைப்பகுதியிலிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் அமையும்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகதாது அணை கட்டுவது தொடர்பாக முதல் கட்ட ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

 

இந்த திட்டம் நிறைவேற்றபட்டால் தான் தமிழகத்துக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய 177.25 டி‌எம்‌சி நீரை தொடர்ந்து தமிழகத்திற்கு வழங்க முடியும் என்றும் கோரப்பட்டுள்ளது.


Leave a Reply