தந்தை மறைவு தெரிந்தும் களத்தில் வெற்றிக்கு உதவிய ஹாக்கி வீராங்கனை

பெண்கள் உலக ஹாக்கி தொடர் ஜப்பானில் உள்ள ஹீரோசிமாவில் நடைபெற்றது. இந்த தொடரில் கடந்த சனிக் கிழமை இந்தியா சிரி அணிகள் மோதின. இதில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியதோடு ஒலிம்பிக் போட்டிகளுக்கும், தகுதி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு அனைத்து வீராங்கனைகளும் காரணம் என்றாலும், பெரும் பங்கு லேல் ரெம்ஸியாமையை சேரும்.

 

அப்படி என்ன செய்து விட்டால் ரெம்ஸியாமி. 19 வயதான லேல் ரெம்ஸியாமி மிசோரம் மாநிலத்தை சேர்ந்தவர். இவரது தந்தை விவசாயி ஆவார். ரெம்ஸியாவிற்கு விளையாட்டில் மீது தீராத ஆர்வம் . தனது குழந்தையின் ஆர்வத்தை தெரிந்து கொண்ட அவரது தந்தை வறுமையிலும் அவளது கனவை தொடர உறுதுணையாக இருந்துள்ளார். தந்தையின் உறுதுணை , கடுமையான உழைப்பு ஆகிய இரண்டும் ஷியாமியை வெற்றிக்கு பயணிக்க வைத்தது.

 

அந்த கனவின் வீரியம் தான் தற்போது அவரை கடந்த சனிக்கிழமை ஹிரோஷிமாவில் நடந்த இந்தியா சிரி அணிகள் மோதிய போட்டியில் பங்கு பெற செய்தது. அனைத்து வீரர்களும் போட்டிக்கு தயாராகி கொண்டு இருந்தன. அப்போது அங்கே வந்த ஒரு செய்தி அனைவரையும் ஒரு கணம் நிலைகுலைய செய்துவிட்டது. ஷியாமின் தந்தை நெஞ்சு வலியால் உயிரிழந்து விட்டார் என்பது தான்.

 

இந்த போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றால் தான் ஒலிம்பிக்கில் பங்கு பெரும் கனவு நிறைவேறும் என்ற இக்கட்டான சூழ்நிலை அணிக்கு இருந்தது. ஆனாலும் சியாமீன் தவிப்பை உணர்ந்த குழுவின் பயிற்சியாளர் அவரை சொந்த ஊருக்கு அனுப்புவதற்கான வேலைகளில் ஈடுபட்டார். அப்போது அழுது கொண்டிருந்த ஷியாமி எனது தந்தையை பெருமை அடைய செய்ய விரும்புகிறேன்.

 

ஆகவே நான் இங்கேயே இருந்து விளையாட போகிறேன் என்றும் நிச்சயம் அணி ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெறும் என கூறி அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்து இருக்கிறார். பல சமாதானங்களும் நடைபெற்றன. அவள் தான் முடிவில் உறுதியாக இருந்தார்.இறுதியில் அவளின் பங்களிப்போடு அணி போட்டியில் வெற்றி பெற்றது. போட்டி முடிந்ததும் அனைவரும் ஷியாமியை ஆறுதல் படுத்தியுள்ளனர். அவள் கோல் அடிக்கவில்லை என்றாலும், குழுவின் எல்லாவும் ஆக அவள் தான் இருந்தால்என்றும் கூறினார்.


Leave a Reply