இராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்தார்!எடப்பாடி பழனிச்சாமி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் இராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்தார். இதனையடுத்து, புதிய கட்டடத்தில் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் குத்து விளக்கு ஏற்றி வைத்து, மாணவ மாணவியருக்கு இனிப்பு வழங்கினார்.

சேதுபதி அரசினர் கலைக்கல்லூரி இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் இருபாலருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும். இக்கல்லூரி 1965ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் கூடுதலாக இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் இராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்தார்.


Leave a Reply