மத்திய அரசின் ஜீவன் ரக்ஷா விருது தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் * மாவட்ட ஆட்சியர் தகவல்

Publish by: --- Photo :


நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சாரம், தீ விபத்துகள், நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகளில் மனித உயிர்களை மீட்போருக்கு ஜீவா ரக்ஷா பதக்க விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை வீரத்துடன் போராடி மீட்போருக்கு சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம், துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்போருக்கு உத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம்,தனக்கு காயம் ஏற்படினும், வீரத்துடன் தாமதமின்றி செயல்பட்டு உயிரைக் காப்போம்க்கு ஜீவன் ரக்ஷா பதக்கம் வழங்கப்படும்.

 

அதன்படி, 2019ஆம் ஆண்டிற்கான ஜீவன் ரக்ஷா பதக்க விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதிற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தள முகவரி www.sdat,tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 2019 ஆம் ஆண்டிற்கான ‘ஜீவன் ரக்ஷா பதக்க விருது’ விண்ணப்பம் எனக் குறிப்பிட்டு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்கள், மூன்று நகல்களுடன் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகம், சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கம், ராமநாதபுரம் என்ற முகவரியில் 08.7.2019 மாலை 5 மணிக்குள் அலுவலக நேரத்தில் சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 

மேலும் விவரங்கள் பெற 04567 – 230 238 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தகுதியான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் பரிந்துரையுடன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.


Leave a Reply