காதலனை தேடி சென்ற சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்

ஆந்திர மாநிலம் குண்டூர் நகரைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தான் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டவர் . அந்த சிறுமியின் தாத்தா உடல் நிலை சரியில்லாமல் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். தாத்தாவிற்கு உதவியாக அந்த சிறுமி சில நாட்களுக்கு மருத்துவமனையில் இருந்துள்ளார். அப்போது மருத்துவமனைக்கு வந்து சென்ற ராம் என்ற ஓட்டுனருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

 

அந்த பழக்கம் குறித்து அறிந்த பெற்றோர் சிறுமியை கண்டித்ததோடு சிறுமியை சொந்த ஊரான குண்டூருக்கு அழைத்து சென்றுள்ளனர். இருந்தும் சிறுமிக்கும் ராமுக்குமான தொடர்ந்து மொபைல் மூலமாக நீடித்ததை அறிந்த பெற்றோர் மீண்டும் சிறுமியை கண்டித்துள்ளனர். இதனை ராமிடம் சிறுமி கூற உடனடியாக அவர் ஊருக்கு புறப்பட்டு வருமாறு ராம் கூறியுள்ளார்.

 

இதனை நம்பி 5 நாட்களுக்கு முன்பு அதிகாலையிலேயே வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி பேருந்து நிலையத்திற்கு சென்று காலை 9 மணி முதல் ராமுக்காக காத்திருந்து உள்ளார். ராமுவிற்கு அருகில் இருந்த கடையில் இருந்து ஃபோன் செய்தும் மாலை வரை அந்த நபர் போனை எடுக்காததால் விரக்தியுடன் அழுதபடி அந்த கடையின் அருகில் அமர்ந்து இருந்துள்ளார். அந்த கடையில் வேலை பார்க்கும் ராஜு என்ற மாற்று திறனாளி பேசு கொடுத்து சிறுமியின் நிலையை அறிந்துள்ளார்.

 

ராமு தனது நண்பன் தான் என்றும் அவனிடம் சிறுமியை பத்திரமாக சேர்ப்பதாக கூறிய பாஜி தனது நண்பன் ஆகாஷின் அறைக்கு சிறுமியை அழைத்து சென்று இருவரும் இணைந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுமியை அந்த அறையில் அடைத்து வைத்து இரண்டு நாள் தொடர்ந்து பாலியல் வன்முறையில் ஈடுபட்டனர். மேலும் மற்ற நபர் இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்று 4 பொறியியல் மாணவர்கள் 4 நாளாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

 

தொடர்ந்து கொடுமைகளை அனுபவித்து வந்த சிறுமி எப்படியோ தப்பித்து பேருந்து நிலையம் இருக்கும் இடத்திற்கு ஓடி வந்துள்ளார். அபாய குரல் எழுப்பிய படி சிறுமி ஓடி வந்ததை பார்த்த காவலர் ஒருவர் தடுத்தி நிறுத்தி விசாரித்த போது தனக்கு நேர்ந்த கொடுமைகளை சிறுமி அவரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் பாஜி, ஆகாஷ், பொறியியல் மாணவர்கள் இருவர் உட்பட 4 பேரை கைது செய்து மேலும் 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Leave a Reply