ஊத்தங்கரை அருகே பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து -3 பேர் பலி

கிரிஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பெரியஜோதிப்பட்டியில் பட்டாசு கிடங்கு விபத்தில் நடந்த வெடி விபத்தில் மூவர் உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த கிராமத்தில் ரிஸ்வான் பாட்ஷா என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோன் இங்கு செயல்பட்டு வருகிறது. இவர்களுக்கு ஏற்கனவே வேறொரு இடத்தில் ஒரு குடோனும் இருந்தது. இன்று காலையிலிருந்து இந்த குடோனில் மொத்தம் 13 பேர் வேலை செய்து வந்துள்ளனர்.

 

இந்த நிலையில் ஐந்து பேர் ஒரே குடோனில் வேலை செய்து வந்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் 2 பெண்கள் 1 ஆண் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். மேலும், அன்வர் மற்றும் இம்ரான் ஆகிய இருவரும் தீக்காயத்துடன் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சம்பவம் நடத்த இடத்தை நேரில் வந்து பார்வையிட கிரிஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பாளர் வந்து பார்வையிட்டுள்ளார்.

 

மேலும்,இவர் அனுமதி பெற்று நடத்துகிறாரா? வெடி மருந்து தயாரிக்க அனுமதி பெற்றுள்ளாரா? என்று , வெடி மருந்து சேமிக்க அனுமதி பெற்றுள்ளார என்ற கோணத்தில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் போல ஏற்கனவே ரிஸ்வான் பாஷாவுக்கு சொந்தமான தாமரை பட்டியில் வெடி மருந்து தொடர்பான தொழிலை வீட்டீல் செய்து வந்த பொழுது அங்கு விபத்து ஏற்பட்டு ஒரு பெண் உயிரிழந்து உள்ளதாக ஒரு புகாரும் எழுந்துள்ளது. மேலும் இரண்டாவது முறையாக அதே ரிஸ்வான் க்கு சொந்தமான மற்றொரு வெடி மருந்து கிடங்கில் இது போன்று நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply