பொருளாதார வளர்ச்சிக்காக பிரதமர் ஆலோசனை

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கடந்த நிதியாண்டின் 4 வது காலாண்டில் 5.8 சதவீதமாக குறைந்ததால் சீனாவை விட வளர்ச்சியில் பின் தங்க நேரிட்டது. ஐந்து ஆண்டுகளில் இல்லாத விதத்தில் 2018 மற்றும் 2019 ஆம் நிதியாண்டில் ஜி‌டி‌பி வளர்ச்சி 6.8 சதவீதமாக சரிந்தது.

 

இதையடுத்து பொருளாதார வளர்ச்சியை 5 லட்சம் அமெரிக்க டாலராக அதிகாரிக்கும் விதத்தில் செயல்பட வேண்டும் என்று அனைத்து அமைச்சக செயலாளர்களிடம் இம்மாத தொடக்கத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார். அடுத்த மாதம் 5 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யபட இருக்கும் சூழலில் முன்னனி பொருளாதார, நிதி நிபுணர்களை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

 

டெல்லியில் உள்ள நிதி ஆயுக் அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கான திட்டங்கள், வேலை வாய்ப்பை உருவாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், எதிர் கொள்ள வேண்டி இருக்கும் சவால்கள் உள்ளிட்டவைகளை நிபுணர்கள் பிரதமரிடம் விளக்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நிதி ஆயுக் அமைப்பில் இடம் பெற்றுள்ள முக்கிய நிர்வாகிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.


Leave a Reply