குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து திமுக., சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து திமுக., சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் வ.சத்தியமூர்த்தி, முன்னாள் எம்பி., பவானி ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ.,கள் முருகவேல், திசை வீரன், மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, தலைமை செயற்குழு உறுப்பினர் அகமது தம்பி, முன்னாள் மாவட்ட செயலர்கள் சுப.த.சம்பத்குமார், சுப.த. திவாகரன், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலர் ஜீவானந்தம், நகர் செயலர்கள் கார்மேகம், ராஜா, நாசர் கான், சத்தியநாதன் மாவட்ட மீனவரணி துணை செயலர் பூவேந்திரன், மாவட் இளைஞரணி துணை அமைப்பாளர் சம்பத் ராஜா, அரசு ஓய்வு அதிகாரி குணசேகரன், பேராசிரியர் நக்கீரன், ராமநாதபுரம் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் அய்யனார், நகர் மீனவரணி துணை அமைப்பாளர் சுல்தான் கமர்தீன், தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் பிரவீன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.காவிரி குடிநீர் விநியோகத்தை முறைபடுத்தப் படு வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


Leave a Reply