குற்றாலத்தில் நீர் வரத்து அதிகரிப்பு ! சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

குற்றாலத்தில் நீர் வரத்து அதிகமாகி உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து விட்டு செல்கின்றனர். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சாரல் மழை பெய்து வருவதன் காரணமாக குற்றாலம் பிரதான அருவி மற்றும் ஐந்து அருவியில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

 

இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று குளித்து செல்கின்றனர். எனினும் சீசன் காலமானாலும் போதிய அளவில் சுற்றுலா பயணிகள் வராததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.


Leave a Reply