பள்ளி குழந்தைகளுடன் நேரம் செலவிட்ட இந்திய அணி வீரர்கள்

இங்கிலாந்தில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகளுடன் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நேரம் செலவிட்டனர். உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று இருக்கும் அணி வீரர்கள் பள்ளி குழந்தைகளை சந்திக்கும் கிரிக்கெட் கிளினிக் என்ற நிகழ்ச்சியை ஐ‌சி‌சி நடத்தி வருகிறது. அதன்படி சௌத்கேம்ப்டனில் உள்ள மைதானத்தில் முப்பது பள்ளி குழந்தைகளுடன் இந்திய அணி வீரர்களான விராட் கோலி, ராகுல், ஹர்திக் பாண்டியா மற்றும் ரிசப் பந்த் ஆகியோர் நேரம் செலவிட்டனர். அப்போது கேப்டன் விராட் கோலி குழந்தைகளுக்கு பந்து வீசினார். பின்னர் பேசிய கோலி குழந்தைகளின் வாழ்க்கையில் கிரிக்கெட் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் தான் நம்புவதாக கூறினார்.


Leave a Reply