4 பேர் மீது நில மோசடி வழக்கு: மாட்டிக்கொண்ட திமுக மாஜி எம்.எல்.ஏ..!

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே 80 லட்ச ரூபாய் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரபதிவு செய்ததாக திமுக முன்னாள் எம்.எல்.ஏ.அப்பாவு உள்ளிட்டோர் மீதான வழக்கை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கபட்டுள்ளது. பாளையங்கோட்டையை சேர்ந்த தாமோதரனுக்கு ராதாபுரத்தை அடுத்த குடியிருப்பில் 80 லட்சம் மதிப்பிலான 10 சென்ட் நிலம் உள்ளது.

 

இந்த நிலத்தை திமுக முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு. பிச்சாம்மாள் முத்து கிரிஷ்ணன்,சந்தானம் ஆகிய 4 பேர் போலி ஆவணங்கள் தயார் செய்து பத்திரபதிவு செய்து விட்டதாக தாமோதரன் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யுமாறு நெல்லை நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி 4 பேர் மேலும் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்ட நிலையில் வழக்கை விரைவாக விசாரிக்கவும் மனு அளித்துள்ளார்.


Leave a Reply