மதுரையில் சாலை விபத்தில் சிக்கிய 3 பேரை மீட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்களை மருத்துவமனையில் சேர்த்து நிதி உதவியும் அளித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஆவியூரிலிருந்து மதுரைக்கு அரிசி மூட்டைகளை எடுத்து சென்ற வாகனம் ஒன்று மதுரையின் ஒரு பகுதியில் டயர் வெடித்து விபத்துக்கு உள்ளானது. இதில் வாகனத்தின் ஓட்டுனர் உட்பட 3 பேர் காயமுற்றனர்.
அப்போது மதுரையில் நிகழ்ச்சி ஒன்றை முடித்துக் கொண்டு சிவாகாசிக்கு சென்று கொண்டிருந்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விபத்து நேரிட்டு இருப்பதை கண்டார். விபத்தில் சிக்கிய சண்முகம் , கருப்பையா, வீரபத்திரன் ஆகிய மூவரையும் தன்னுடன் வந்தவர்களின் காரில் ஏற்றி அமைச்சர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் மூவரின் மருத்துவ செலவிற்காகவும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உதவி செய்தார்.