காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட கிராம நிர்வாக அலுவலர்

திருப்பூரில் உள்ளிருப்புபோராட்டத்தில் ஈடுபட்டவரிடம் காலில் விழுந்து பெண் கிராம அலுவலர் ஒருவர் மன்னிப்பு கேட்டார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் முத்துலட்சுமி அதே பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவரின் இறப்பு சான்றிதழை பெற அவரது மகன் சுந்தரேசன் என்பவரை முத்து லட்சுமி கடந்த ஒரு மாத காலமாக அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.

 

இதனால் மன உளைச்சசலில் இருந்த சுந்தரேசன் உறவினருடன் கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ளிரருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். உரிய பதிலளிக்காமல் தான் செய்த தவறை ஒத்துக்கொண்ட முத்துலட்சுமி பாதிக்கப்பட்ட சுந்தரேசனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். இதனையடுத்து உள்ளிருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.


Leave a Reply