முத்தலாக் சட்ட வரைவு மசோதா மாநிலங்களவையில் தாக்கல்

திருத்தபட்ட முத்தலாக் சட்ட வரைவு மசோதா மாநிலங்களவையில் நேற்று மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மக்களவையிலும் இன்று அது தாக்கல் செய்யப்படுகிறது. முஸ்லிம் பெண்ணை 3 முறை தலாக் கூறி உடனடியாக விவாகரத்து செய்யும் முறைக்கு முடிவு கட்டுவது பிரதமர் மோடி அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றாகும்.கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மக்களவையில் நிறைவேறிய முத்தலாக் தடுப்பு மசோதா மாநிலங்களவையின் எதிர்கட்சி ஆதரவு இல்லாததால் நிலுவையில் வைக்கப்பட்டது. .

 

அதில் சில திருத்தங்களை செய்து நேற்று மாநிலங்களவையில் மீண்டும் அரசு தாக்கல் செய்து உள்ளது. நேற்று ஒரே நாளில் முத்தலாக் தடுப்பு சட்ட மசோதா ஜம்மு காஷ்மீர் சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட 10 முக்கிய மசோதாக்கள் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. விவாதத்திற்கு பின்னர் இந்த மசோதா நிறைவேறினால் இஸ்லாமிய பெண்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Reply