சென்னையில் ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.528 உயர்வு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 528 ரூபாய் உயர்ந்தது. அமெரிக்க மத்திய வங்கி இந்த ஆண்டில் வட்டி குறைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இந்த ஆண்டுகளில் இல்லாத உயர்வை எட்டியுள்ளது. இது உள்ளூர் சந்தையிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னையில் நேற்று ஒரு சவரன் தங்கம் 528 ரூபாய் உயர்ந்து 25,704 ரூபாயாகவும்,கிராம் ஒன்றுக்கு 66 ரூபாய் உயர்ந்து 3,213 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதே போல வெள்ளி விலை ஒரே நாளில் கிலோ ஒன்றுக்கு 1000 ரூபாய் அதிகரித்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து 41 ரூபாய் 30 காசுகளுக்கு,ஒரு கிலோ வெள்ளி 41,300 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.


Leave a Reply