காஞ்சிபுரத்தில் கடத்தி செல்லப்பட்ட 6 திருநங்கைகள் போலீசாரால் மீட்பு

காஞ்சிபுரம் அருகே 6 திருநங்கைகள் கடத்தப்பட்ட வழக்கில் 5 திருநங்கைகள் உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். குருவி மலைப்பகுதியில்உள்ள திருநங்கை குடியிருப்பில் இருந்த 6 திருநங்கைகளை குன்றத்தூரை சேர்ந்த திருநங்கைகள் உள்ளிட்ட ரௌடி கும்பல் ஒன்று கார் மற்றும் ஆட்டோவில் கடத்தி சென்றது. கடத்தலை தடுக்க முயற்சித்த அங்கிருந்த திருநங்கைகள் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

கடத்தலில் ஈடுபட்டவர்களை தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் குன்றத்தூர் பகுதியை சேர்ந்த 5 திருநங்கைகள் மற்றும் கடத்தலுக்கு உதவியாக இருந்ததாக கூறி 4 பேர் என 9 பேர் கைதுசெய்யப்பட்டு உள்ளனர். கடத்தப்பட்ட திருநங்கைகள் மீட்கப்பட்ட நிலையில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் ஆயுதங்களோ போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.


Leave a Reply