மகளின் கண் முன்னே தாய் பலியான சம்பவம்

சேலம் அருகே நடந்த சாலை விபத்து காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாரமங்களத்தில் நடந்த விபத்தில் அரசு பள்ளி ஆசிரியை பலியானார். ஓலைபட்டியில் பணியாற்றி வந்த தனது மகளுடன் சாலை ஓரத்தில் நடந்து சென்றார். அப்போது செம்மண் ஏற்றி வந்த லாரி அவரின் மீது மோதியது. இதில் மகளின் கண் முன்னே ஆசிரியர் பலியானார். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய லாரி ஓட்டுனர் கோபாலை போலீசார் தேடி வருகின்றனர்.


Leave a Reply