பெரியகுளத்தில் நடந்த மா விழா மற்றும் கருத்தரங்கம்

Publish by: --- Photo :


பெரியகுளத்தில் நடைபெற்ற மா விழாவில் 350 க்கும் மேற்பட்ட மா ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் மா விழா கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. இவ்விழாவில் மல்கோவா, பங்கண பள்ளி, அல்போன்சா உள்ளிட்ட சுமார் 350 மா ரகங்கள் காட்சிபடுத்தப்பட்டன.

 

முன்னதாக இந்த கண்காட்சியை தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக துணை வேந்தர் ,முனைவர் குமார் திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் நடந்த கருத்தரங்கில் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பள்ளி கல்லூரி மாணவர்கள் என 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Leave a Reply