பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் இடைநிலை பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்விற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தரவரிசை பட்டியலை வெளியிட்டார். கலந்தாய்வுக்கு தகுதி பெற்ற ஒரு லட்சத்து நான்காயிரத்து நானூற்று ஆறு பேரில் முதல் 10 இடங்களை பிடித்தவர்களின் பெயர்களை அறிவித்தார்.

 

200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று முதல் இடங்களை பிடித்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகங்களில் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் சேர இந்த ஆண்டு மொத்தம் 1,03,316 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். அதில் 1,04,406 பேர் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவராவர்.

 

பி.இ, பி.டெக் படிப்புகளில் 148 இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு ஜூன் 25 ஆம் தேதி தொடங்குகிறது. சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாத 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் என பொறியியல் படிப்புகளில் 68,000 க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply