ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் பதித்து வைத்திருந்த குழாயில் உடைப்பு!

தஞ்சை மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் பதித்து வைத்திருந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கசிந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். கும்பகோணம் மாவட்டம் கதிரமங்கலத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு குழாய்கள் மூலமாக கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக ஓஎன்ஜிசி சார்பில் பூமிக்கு அடியில் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 

இன்று கதிராமங்கலத்தில் உள்ள வெள்ளை பிள்ளையார் கோவில் அருகே குழாய் பதிக்கப்பட்டிருந்த இடத்தில் கச்சா எண்ணெய் கசிந்ததை கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து ஓஎன்ஜிசி அதிகாரிகள் எண்ணெய் கசிவை சீர் செய்தார்கள். பூமிக்கு அடியில் இருக்கும் குழாயில் மண் அரிப்பினால் துளைகள் விழுந்து கச்சா எண்ணெய் கசிந்ததாக சொல்லப்படுகிறது.


Leave a Reply